Feed Item
·
Added article

கோலிவுட்டின் புதிய ஜோடி கவின் மற்றும் நயன்தாரா நடிக்கும் Hi படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் கவின் தற்போது சினிமாவில் நடித்து பிரபலமாகி வருகிறார். அவரது நடிப்பில் வெளிவந்த ஸ்டார், டாடா உள்ளிட்ட படங்களை ரசிகர்களை கவர்ந்தன. அடுத்ததாக அவர் மாஸ்க் மற்றும் அவரது 9-ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜின் அசிஸ்டென்ட் விஷ்ணு இயக்கும் இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு ராஜேஷ் சுக்லா. எடிட்டிங் பிலோமின் ராஜ். கலை சேகர். ஸ்டன்ட் தினேஷ் காசி மேற்கொள்கின்றனர்.

Hi என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

  • 465