பிரபல நடிகர் விஷால் தனது புதிய படமான 'புருஷன்' படப்பிடிப்பின் போது முதுகில் காயம் அடைந்துள்ளார். கோவாவில் ஆக்ஷன் காட்சி படமாக்கும் போது இந்த விபத்து நடந்ததாக இன்று காலை தகவல் வெளியானது. வலி இருந்தும் தொடர்ந்து நடித்துள்ளார் விஷால்.
தற்போது ஓய்வில் இருக்கும் அவர் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் 3 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அவர் எப்போது மீண்டும் படப்பிடிப்பில் இணைவார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
'புருஷன்' படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். ஆக்ஷன் காட்சிகளை டூப் இல்லாமல் நடிக்கும் விஷால், இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.