Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சமூக தொடர்பான புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தவறிய சில ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

ரிஷபம்

தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறையும். மகான்களின் சந்திப்புகள் சிலருக்கு ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை வேண்டும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பாசி

 

மிதுனம்

எந்த ஒரு செயலிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சஞ்சலங்களால் மனதளவில் சோர்வுகள் ஏற்படும். செய்தொழிலில் சில மாற்றமான சூழல் அமையும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். கடன் விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கடகம்

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். துணைவர் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

சிம்மம்

எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். சமூக பணிகளில் செல்வாக்கு உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்த பணிகளில் லாபம் மேம்படும். முயற்சிக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். அன்பு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

 

கன்னி

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

துலாம்

நினைத்த சில பணிகள் தாமதமாக முடியும். தாயுடன் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் உண்டாகும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சமூகப் பணிகளில் உயர்வு உண்டாகும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

விருச்சிகம்

முயற்சிக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

தனுசு

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும். இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

மகரம்

எதிலும் படபடப்பு இன்றி பொறுமையுடன் செயல்படவும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் செயல்களில் மேற்கொள்வது மேன்மை தரும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் வேண்டும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கும்பம்

கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

மீனம்

மனதளவில் உற்சாகம் பிறக்கும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். பூமி விருத்திக்கான சூழல்கள் ஏற்படும். மற்றவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 223