Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுமக்கள் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுகொடுத்து செல்லவும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

ரிஷபம்

எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பேராசை தவிர்க்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மிதுனம்

கனிவான பேச்சு மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். விவசாய பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். சுய தொழிலில் லாபகரமான சூழல் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தனம் சேரும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்

எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். இறை வழிபாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். தனம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பக்தி நிறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

சிம்மம்

பணிபுரியும் இடத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். மற்றவர்கள் நம்பி முடிவு எடுப்பதில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். முன் கோபத்தினை குறைத்துக் கொள்வது தேவையற்ற பகைமையை தவிர்க்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தேவையற்ற வாக்குறுதிகளை தவிர்க்கவும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

கன்னி

துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் ஆதாயமடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபசெய்திகள் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். அறப்பணிகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வு கிடைக்கும். குழப்பம் தீரும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை

துலாம்

வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வர்த்தகம் செயல்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

விருச்சிகம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உயர்வு தரும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

தனுசு

வாக்கு சாதுரியம் மூலம் லாபங்களைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தாய்வழி உறவுகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். சோர்வு நீங்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

பத்திரிகை துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். அண்டை அயலார் ஆதரவுடன் செயல்படுவார்கள். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சாந்தம் நிலவும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

கும்பம்

வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளின் தயக்கமும் கால தாமதமும் நேரிடும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சுக்கள் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். சிந்தனைபோக்கில் கவனம் வேண்டும். நன்மை நடக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

கோபத்தை கட்டுப்படுத்தி முன்னேறுவதற்கான சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். விற்பனை துறையில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வது நல்லது. செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் உருவாகும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

  • 38