Feed Item
·
Added a news

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புடினுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற வழக்கில், அதாவது வரிகளை இறுதி செய்வது தொடர்பான வழக்கில் நாம் வெற்றி பெற்றால், உலகின் பணக்கார நாடாக நாம் இருப்போம். பேச்சுவார்த்தை நடத்த நமக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. வரிகளைப் பயன்படுத்தி, ஏழு போர்களைத் தீர்த்து வைத்தேன். ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவர ஜெலென்ஸ்கி ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டியிருக்கும். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புடினுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

ஐரோப்பா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். அவர்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நான் விரும்பவில்லை. மேலும் அவர்களுக்கு விதிக்கும் தடைகள் போதுமானதாக இல்லை. நான் மேலும் பொருளாதார தடைகளை செய்ய தயாராக இருக்கிறேன். டிக்டாக் தொடர்பாக எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது. நான் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.

வெள்ளிக்கிழமை சீன அதிபர் ஜி ஜின்பிங்யிடம் பேசி எல்லாவற்றையும் உறுதிப்படுத்தப் போகிறேன். நாங்கள் ஒரு நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை செய்துள்ளோம். அது இரு நாடுகளுக்கும் பொருந்தும் என்று நம்புகிறேன். ஆனால் கடந்த காலத்தில் அவர்கள் செய்ததை விட மிகவும் வித்தியாசமான ஒப்பந்தம். அதை வாங்க விரும்பும் மிகப் பெரிய நிறுவனங்களின் குழு எங்களிடம் உள்ளது என டிரம்ப் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

  • 58