Feed Item
·
Added a post

சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளி மூடப்பட்டது. ஆனால், இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் பொதுமக்களின் முயற்சியால், 3 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.

தற்போது, இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 42 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இருந்தாலும், மாணவர்களின் சேர்க்கையை மேலும் அதிகரிக்க, அப்பள்ளி ஆசிரியர்கள் நூதன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வரை டெபாசிட் செய்வதாக உறுதியளித்து,வருகின்றனர்.

இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை எந்த வகுப்பில் சேர்த்தாலும் ரூ.5 ஆயிரமும்; ஏழாம் வகுப்பில் சேர்த்தால் ரூ.4 ஆயிரமும்; எட்டாம் வகுப்பில் சேர்த்தால் ரூ.3 ஆயிரமும்; ஒன்பதாம் வகுப்பில் சேர்த்தால் ரூ.2 ஆயிரமும் டெபாசிட் செய்யப்படவுள்ளது.

இதேபள்ளியில் பயிலும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு முடித்துச் செல்லும் போது, முதிர்வடையும் தொகையை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • 64