Feed Item
·
Added a news

அக்டோபர் 1, 2026 முதல் கனடாவின் ஐந்து மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்டாரியோ, பிரின்ஸ் எட்வர்ட் தீவு, நோவா ஸ்கோடியா, மானிடோபா மற்றும் சஸ்காட்செவான் ஆகிய மாகாணங்களில் இந்த உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஒன்டாரியோவில் மணிக்கு 17.95 டாலராகவும், நோவா ஸ்கோடியாவில் 17 டாலராகவும், மானிடோபாவில் 16.40 டாலராகவும் உயர்த்தப்பட்டுள்ளது

இருப்பினும் தொழிலாளர் அமைப்புகள் இந்த உயர்வு போதாது என்று கூறுகின்றன. டொராண்டோ பகுதியில் வாழ்வதற்கு தேவையான ஊதியம் மணிக்கு 27.20 டாலர் என்ற நிலையில், தற்போதைய உயர்வு 9 டாலர் குறைவாக உள்ளது. வீட்டு வாடகை மற்றும் உணவு செலவுகள் வேகமாக உயர்வதால், 35 சென்ட் உயர்வு போதுமானதாக இல்லை என்று Workers' Action Centre தெரிவித்துள்ளது

  • 28