Feed Item
·
Added a post
  • எளிமையான உணவுகளில்கூட நல்ல ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்தலாம். அப்படிப்பட்ட எளிய உணவுகளில் ஒன்றுதான் அவித்த வேர்க்கடலை.
  • நிலக்கடலையில் உள்ள குறைந்த கிளைஸ்மிக் இன்டெக்ஸ் உடலின் இரத்த சர்க்கரை அளவை சரியாக வைக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது தவிர்க்கப்படுகிறது.
  • வறுத்த நிலக்கடலையை விட வேகவைத்த நிலக்கடலையில் சத்துக்கள் அதிகம் என கூறப்படுகிறது.
  • வேகவைத்த நிலக்கடலையில் புரதம், வைட்டமின்கள், மினரல்கள் அதிகம் உள்ளன. இது உண்பதற்கு மிகுந்த சுவையாக இருப்பதோடு, சத்துக்களையும் அள்ளித் தருகிறது.
  • நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • வேகவைத்த நிலக்கடலையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. மகாத்மா காந்தி தினமும் அவித்த வேர்க்கடலை ஒரு கைப்பிடியும் ஆட்டுப்பாலும்தான் முக்கிய உணவாக எடுத்துக்கொண்டார்.
  • தினமும் 40 கிலோ மீட்டர் தொலைவு நடக்கும் வலிமையை அது அவருக்குத் தந்தது என்று சத்திய சோதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 32