இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தள்ளிப் போன சில ஒப்பந்தம் வியாபாரத்தில் கையெழுத்தாகும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். ஆக்கபூரவமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
குடும்பத்தின் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்களில் சிறு சிறு வழிகள் ஏற்பட்டு நீங்கும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் அளவுடன் செயல்படுவது நல்லது. சில பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வது நன்மையை தரும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
தன வருவாய் தேவைக்கு இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். இனம் புரியாத சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். குடும்ப பெரியவர்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல்கள் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவுகள் ஏற்படும். கமிஷன் பணிகளில் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் உயரும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சிம்மம்
முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலை ஆட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆராய்ச்சி வழி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை ஆட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். வர்த்தக முதலீடுகளில் தவிர்ப்பது நல்லது. செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
விருச்சிகம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் ஏற்படும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகரம்
எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். தெய்வீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். வருவாயை மேம்படுத்துவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
முயற்சிக்கு உண்டான பலன்கள் சாதகமாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடிவரும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். சேமிப்பு விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மீனம்
பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்