இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. புது பணியில் அமர்வீர்கள். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்துப் பேசுவர். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மிதுனம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
கடகம்: எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் இன்று வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் தரம் ஒருபடி உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவருவீர்.
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
கன்னி: தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். உடன்பிறந்தோர் ஒத்தாசையாக நடந்து கொள்வார்கள். யோகா, தியானத்தில்மனம் லயிக்கும். பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
துலாம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பால்ய நண்பர்கள், உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேற்றுமொழிப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
விருச்சிகம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கிய பிரமுகர்களின் உதவி கிட்டும். அலுவலகத்தில் யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம்.
தனுசு: வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும். சோர்வு நீங்கி, உற்சாகமாக புது முயற்சிகளில் இறங்குவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மகரம்: கணவன் மனைவிக்குள் பனிப்போர் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். சந்திராஷ்டமம் தொடர்வதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டிவரும்.
கும்பம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளவும். வியாபாரத்தில் பல யுக்திகளைக் கையாண்டு வெல்வீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலையாட்கள் அன்பாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.
