🌹இன்று பல கணவன்மார்கள் தன் மனைவிகள் ஊருக்கு போய்விட்டால் அடுத்த வினாடியே தன்னுடைய வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைப்பது
🌹 ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ என்ற நகைச்சுவையைத்தான். அப்படி பட்ட நகைச்சுவைக்கு சொந்தக்காரராக விளங்கியவர் ஜனகராஜ்.
🌹80களி ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் இணைந்து தன்னுடைய தனித்துவமான நகைச்சுவை காட்சிகளாலும் தனக்கே உரிய பாணியாலும் பேசி மக்களை கவர்ந்தவர்.
🌹அவருக்கு உண்டான தனிச்சிறப்பே அந்த சிரிப்புதான். அதை இன்றளவும் பல மிமிக்ரி கலைஞர்கள் பின்பற்றி வருகின்றனர். அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஜனகராஜ்.
🌹ஆனால் சில ஆண்டுகளாகவே ஜனகராஜை நாம் சினிமாவில் பார்க்க முடிவதில்லை. அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 96.
🌹அந்த படத்தில் பள்ளிக் கூடத்தின் பாதுகாவலராக நடித்திருப்பார் ஜனகராஜ்.
🌹அதன் பிறகு அவரை பார்க்கவே முடியவில்லை. இந்த நிலையில் நீண்ட வருடங்கள் கழித்து ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த போது வீட்டில் என் மனைவியுடன் இருக்கிறேன். அவ்வப்போது நண்பர்களாக இருக்கும் என் சக நடிகர்களிடம் தொலைபேசியில் பேசிக் கொள்வேன். ஆனால் யாரும் வருவதும் கிடையாது. நானும் போவதும் கிடையாது. அவரவர் வேலையில் பிஸியாக இருப்பார்கள். எனக்கு வயசு 72 ஆகிறது. நலமுடன் இருக்கிறேன் என்று கூறினார்.