இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். அலுவலகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
ரிஷபம்
அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபங்களை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகன மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறுதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கடகம்
ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கவனம் வேண்டும். நெருங்கியவர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனம் சாதகமாகும். திட்டமிட்ட பணிகளை மாற்றியமைப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். லாபம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இள நீலம்
சிம்மம்
தாய் வழியில் அனுசரித்து செல்லவும். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தொழில்நுட்ப கருவிகள் விரயங்கள் உண்டாகும். அருகில் உள்ளவர்கள் பற்றிய புதிய அனுபவம் ஏற்படும். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். சுயதொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி
முன்பின் தெரியாதவர்கள் ஒத்தழைப்பாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். பெருமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
துலாம்
உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். ண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும். சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உங்கள் மீதான வதந்திகள் மறையும். வியாபாரத்தில் புது முதலீடுகள் அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
பிள்ளைகளின் விருப்பத்தைப் நிறைவேற்றுவீர்கள். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். குழந்தைகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். கலை பொருல்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
தனுசு
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மறதி பிரச்சனை குறையும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தை விரிவு செய்யவதில் ஆலோசனை வேண்டும். பணி சார்ந்து சில பயணம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யவும். ஜாமின் செயல்களை தவிர்க்கவும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஒப்பந்த பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்புகள் உயரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இள நீலம்
மீனம்
பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் நலனில் கவனம் வேண்டும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குடும்பத்தினரின் குணமறிந்து செயல்படவும். பொது காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். பிடிவாதப் போக்கை குறைத்து கொள்ளவும். நிம்மதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
