மேஷம்
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
ரிஷபம்
பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சொந்தத் தொழிலில் லாபங்கள் மேம்படும். அரசு வழியில் சில உதவிகள் சாதகமாகும். புதுவிதமான கருவிகள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். துணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் அடைவீர்கள். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பாகப்பிரிவினை பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்து செல்லவும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்
கடகம்
சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை ஆட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். வர்த்தக முதலீடுகளில் தவிர்ப்பது நல்லது. பிரயாணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சிம்மம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நவீன கருவிகள் மீது ஆர்வம் ஏற்படும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பலவித மக்களின் தொடர்புகள் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி
வரவுகளில் இருந்த இழுபறிகள் மறையும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். வீடு மனை விற்பனையில் லாபம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். எதிர்ப்பாலின மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோக பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளால் அலைச்சல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
பெரியார்களின் ஆலோசனைகள் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான பலன்கள் சாதகமாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடிவரும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். சேமிப்பு விஷயங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்புகள் உயரும். புதுவிதமான அணிகலன்கள் சேர்க்கை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
மனதளவில் இருந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உருவாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை
கும்பம்
அரசு வழியில் இருந்த நெருக்கடி நீங்கும். மனதில் புதிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் சில பிரச்னைகள் வந்து செல்லும். ஆதாயகரமான முயற்சிகள் நிறைவேறும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். ஆக்கபூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மீனம்
அவசரமான முடிவுகளை தவிர்க்கவும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். எதிர்மறை சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் முதலீடுகளில் ஆலோசனை வேண்டும். சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
