சூர்யா நடிப்பில் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்ற திரைப்படம் மீண்டும் ரிலீஸாகுவதற்கு தயாராகி வருகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே நன்றாக ஓடிய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்வது நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு குஷி, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்து வரவேற்பை பெற்றன.
சூர்யா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான அஞ்சான் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்வதற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் சமந்தா, வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சூர்யா - லிங்குசாமி - யுவன் ஷங்கர் ராஜா - சந்தோஷ் சிவன் போன்றோரின் பிரம்மாண்ட கூட்டணி காரணமாக, அஞ்சான் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சூர்யாவின் "ராஜூ பாய்" கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இருப்பினும், வெளியானபோது இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன், வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. வெளியானபோது இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன், வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் அஞ்சான் படத்தை ரீ எடிட் செய்து மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.