உழவரோடு எப்பொழுதினிலும்
உறுதுணையாய் என்றென்றும்
உழைத்திடும் ஆவினத்தை
அகங்குளிர வைப்பதாய்...
ஆண்டுக்கோர் முறை
அருந்தமிழர் அழகாய்...
கோமாதா குலத்தினை
கொண்டாடும் திருநாளாய்...
மகிழ்ச்சியில் பொங்கிடும்
மாட்டுப் பொங்கல்!
- விஜி.