Feed Item
·
Added joke

மனைவி : போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா ?

கணவன் : ஏன் ,,, அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம் ?

மனைவி : உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.

மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?

கணவன் : ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?

கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி : நான் என்ன பண்றது அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."

கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."



மனைவி : ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!

கணவன் : நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

கணவன் : ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி : ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்...

மனைவி : உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .

கணவன் : வேற என்னதான் போட்ட?

மனைவி : பேசாம பட்டினி போட்டேன்.

மனைவி : டின்னர் வேணுமா?

கணவன் : சாய்ஸ் இருக்கா?

மனைவி : ரெண்டு இருக்கு!

கணவன் : என்னன்ன?

மனைவி : வேணுமா? வேண்டாமா?

கணவன் : “உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?”

மனைவி : “உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?

  • 16