Feed Item
·
Added article

தென்னிந்திய நம்பர் 1 கதாநாயகி ராஷ்மிகா மந்தனா இன்று தனது புதிய மனிதாபிமான திட்டத்தை அறிவித்தார். தனது வரவிருக்கும் படமான ‘ரணபாலி’-யில் ஜெயம்மா கதாபாத்திரம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், அதனால் ‘அன்னபூர்ணா’ என்ற திட்டத்தின் மூலம் 400 குடும்பங்களுக்கு 3 மாதத்திற்கு மளிகை பொருட்கள் வழங்க போவதாக இன்ஸ்டாவில் பதிவிட்டார்.

“ஜெயம்மாவும் நானும் ஒரே மாதிரி, எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவது என் வழக்கம், ஆனால் இதுவரை ரகசியமாக செய்தேன். இப்போது உங்களையும் ஊக்குவிக்க வெளியே சொல்கிறேன்” என்று நெகிழ்ச்சியாக எழுதினார். இது ஒரு வருடம் தொடரும், ஒவ்வொரு 3 மாதமும் 400 புதிய குடும்பங்கள் என 8 நகரங்களில் - ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொச்சி, விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் நடக்கும்.

விஜய் தேவரகொண்டாவுடன் திருமணத்திற்கு பிறகு முதல் படமான ரணபாலி அக்டோபர் 16-ல் வெளியாகும் நிலையில், ராஷ்மிகாவின் இந்த கவர்ச்சியான மனசும், கிளாமர் தோற்றமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. “சிறு உதவி கூட ஒருவரின் வாழ்க்கையை மாற்றும்” என்ற அவரது வார்த்தை வைரல்.

  • 61