உங்க அப்பாவுக்கும்…உங்க அம்மாவுக்கும் வடிச்சி கொட்ட நான் என்ன அவங்கவைச்ச ஆளா…. இனிமே வீட்டு வேலைக்கு ஒரு ஆள்…சமையல் செய்ய ஒரு சமையல் காரின்னு வைச்சிக்கிட்டுபோங்க.., என்னாலே மாரடைக்கமுடியாது….
இப்ப வேலைக்கு ஆள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்டி….. பத்தாயிரம்….. இருபதாயிரம்ன்னு சம்பளம் கேக்கறாங்க..,
உங்கப்பா பென்ஷன்.., உங்கம்மா பென்ஷன்…. உங்க சம்பளமு'ன்னுஎல்லாம் சேர்த்தா லட்சம் ரூபாய்க்குமேல வருதில்லே…. அதுலேஎடுத்து கொடுங்க..,…
அப்ப சரிடி…. அதேபோல் செய்யறேன்…. இன்னைக்கு காலையில் தான் யோசனை செய்தேன்…..மாசா மாசம் குடும்ப பட்ஜெட்ல இழுத்து பிடிச்சி…. மீதம் பண்ணி……உனக்குஒவ்வொரு தீபாவளிக்கும் ரெண்டு மூணு பவுனில் நகை வாங்கி கொடுத்து சர்பிரைஸ்கொடுக்கலாமு 'ன்னு…ரூட்டு போட்டேன்..,.
இது என்னங்கபெரிய வேலை…ஜூஜூபி …. எங்கம்மா வீட்லே எல்லாவேலையும் நானே இழுத்துபோட்டுக்கினு செய்வேன்..தெரியுமா…..
இப்ப என்ன சொல்ல வரே….
நான் போன ரூட்டு ஒன் வே ன்னு தெரியுது……திரும்பி வந்துட்டேங்க…
வேலைக்கு ஆள் கேட்டியே…..
அதெல்லாம்எதுக்குங்க வீண் செலவு….
கடைசியா என்ன சொல்றே…
வாயை கொடுத்து நானே புண்ணாக்கி கிட்டேனே… நான் விட்டாலும்…. இவரு நோண்டுராரே…..
என்ன டார்லிங் முணுமுனணுக்குறே….
ஆங்.,…காலை டிபனுக்கு இட்லி வடை…நெய் சாம்பார் செஞ்சுரு க்கேன்….. வந்து சாப்பிட சொன்னேன்…