பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவின் மூத்த கதாநாயகி தபு இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாளை முன்னிட்டு நாகார்ஜுனா நடிக்கும் 'கிங்100' படக்குழு தபுவின் கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டுள்ளது. அதில் தபு 'மகாந்தி ஜான்சி ராணி' என்ற பிரமாண்டமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆர்.ஏ.கார்த்திக் இயக்கும் இந்த படம் டிசம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த தபு, இந்த புதிய வரலாற்று கதாபாத்திரத்தில் எப்படி இருப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கவர்ச்சியும் கம்பீரமும் கலந்த அவரது தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.