🌹''ஜென்சின்னு ஒரு பொண்ணு இருக்காங்க. அற்புதமான குரல். நீங்க ஒரு தடவை கேளுங்க. பிடிச்சுருந்தா உங்க இசையில் பயன்படுத்திக்கங்க'''' இதுதான் இளையராஜாவிடம், பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சொன்னது.
🌹திறமையற்றவர்களை யேசுதாஸ் போன்றவர்கள் பரிந்துரை செய்யமாட்டார் அப்படின்னு சொல்லுற இளையராஜா, உடனே ஜென்சியை கேரளாவில் இருந்து வரச்சொல்லி குரல் சோதனை செய்கிறார்.
🌹அப்போது ஜென்சி '''அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே''' பாடல் பாடுகிறார். குரல் சோதனைக்காக வந்த ஜென்சிக்கு உடனடியா பாடும் வாய்ப்பு கிடைக்குது. திரிபுரசுந்தரி அப்படிங்கிற படத்தில் ஜானகியோட இணைந்து ஒரு பாடல் பாடுறாங்க. இரண்டாவது 'வட்டத்துக்குள் சதுரம்'' படத்தில் ஒரு பாடல் பாடுகிறார்.
🌹அடுத்த பாடல்தான் ஜென்சியின் குரலைத் தமிழர்களின் வாழ்க்கையில் நிரந்தரமாக்கியது.
🌹மழை முடிந்த பொன்மாலை ஒன்றில், மிச்சமிருக்கும் குளிரோடு இணைந்து வரும் இளம் சூரியனைப்போன்ற ''அடி பெண்ணே'' பாடல்தான் அந்த இரண்டாவது பாடல்.
🌹அவர் அறிமுகமான அந்த 1978 -ம் வருடத்திலேயே அடுத்தடுத்து ஐந்து பெரிய படங்களில் பாடினார். அதில் ஒரு பாடல் பிரியா படத்தில் வரும் என்னுயிர் நீதானே''' பாடல்.
🌹அவரை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய யேசுதாசுடன் இணைந்து பாடிய அந்தப்பாடல்தான் ஜென்சியின் மனதுக்கு நெருக்கமான பாடல் என்று கூறுகிறார்கள்.
🌹புதிய வார்ப்புகள் , நிறம் மாறாத பூக்கள் படங்களில் அவர் பாடியிருந்த பாடல்களைக் கேட்ட பின், ஜென்சியின் தீவிர ரசிகராக இயக்குனர் பாரதிராஜா மாறினார் . இதன் காரணமாகவே அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், என்று வரிசையாக பாரதிராஜா படங்களில் தொடர்ந்து பாடினார் ஜென்சி.
🌹புதிய வார்ப்புகள் படத்தில் ஜென்சி பாடிய 'தம்தனதம்தன தாளம் வரும்' பாடல் இப்போதும் ஆச்சரியமானது என்கிறார்கள். மலையாளம் மட்டுமே தெரிந்த ஜென்சி, தமிழை அத்தனை அழகாக மூச்சு விடாமல் பாடியது முக்கியமானது என்கிறார்கள்.
🌹தமிழ்த் திரையுலகிலிருந்து ஜென்சி காணாமல் போனதற்கு அவருடைய தந்தை அந்தோணி ஒரு காரணம் என்று பத்திரிக்கைகளில் இப்போதும் குற்றம்சாட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் தங்கவிடாமல் செய்து, ஜென்சியை இசையமைப்பாளர்கள் தொடர்பு கொள்ள விடாமல் செய்துவிட்டார் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
🌹பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி ஆகியோரும் ஜென்சி தமிழ்த் திரையுலகில் இருந்து காணாமல் போனதற்குக் காரணம் என்று பூடகமாகச் சொல்லப்பட்டாலும், தான் இப்போதும் எஸ்.ஜானகியுடன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதாக ஜென்சி சமீபத்திய பேட்டி ஒன்றில், கூறி இருக்கிறார்.