இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்படும். இயந்திரம் தொடர்பான பணிகளில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். எந்த ஒரு சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
ரிஷபம்
உத்தியோக ரீதியான வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். துரிதமான செயல்பாடுகள் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சுகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மிதுனம்
பெற்றோர் வழியில் அனுசரித்து செல்லவும். விதண்டாவாத பேச்சுகளை தவிர்க்கவும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி
கடகம்
சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் தோன்றும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். தவறிய சில பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். உயர்கல்வி ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபார அபிவிருத்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் நிமித்தமான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. இனம் புரியாத சிந்தனைகளால் மனப்போராட்டம் மேம்படும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
திட்டமிட்ட காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாலின மக்களால் நன்மை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். புதிய துறை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
சமூகப் பணிகளில் விவேகம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அழுத்தங்கள் அதிகரிக்கும். புதிய கொள்முதல்களில் கவனம் வேண்டும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். அரசு சார்ந்த செயல்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
தனுசு
சில முடிவுகளை தன்னம்பிக்கையுடன் எடுப்பீர்கள். தேவைக்கு உகந்த வரவுகள் கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் உயரும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். தொழில் ரீதியான இழுபறியான வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதரிகள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரம் ரீதியான பிரச்சனைகளில் தெளிவுகள் பிறக்கும். வழக்குகளில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில வேலைகள் சாதகமாகும். தன வரவுகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அரசால் ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம்
சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் கூடுதல் லாபங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
பெரியோர்களின் கருத்துக்களால் மனதில் மாற்றம் பிறக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவீர்கள். மக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் ஆதாயமும் கிடைக்கும். தாய் வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்