அழகான நடிகையான பூனம் பாஜ்வா, 'சேவல்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு 'துரோகி', 'தெனாவட்டு', 'ஜெயிக்கிற குதிர' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும், பின்னர் தமிழில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், நீண்ட காலமாக ஹீரோயின் வேடங்களிலேயே நடிக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் மலையாள சினிமாவை அதிகம் கவனம் செலுத்தி வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, வேறுவழியில்லாமல் 'ஆம்பள' திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததன் மூலம் தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் 'ரோமியோ ஜூலியட்', 'அரண்மனை 2', 'முத்தின கத்திரிக்கா', 'குப்பத்து ராஜா' போன்ற படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்தார். தற்போது தமிழிலும் சில படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சினிமாவைத் தாண்டி, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் காலையில் சொம்பல் முறிக்கும் ஸ்டைலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அடிக்கிற குளிருக்கு அட்டகாசமான போஸ், சுண்டி இழுக்கும் அழகு என கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
