இலங்கையின் பழம்பெரும் நடிகர் ரஹால் புலத்சிங்கள இன்று காலை காலமானார். அவருக்கு வயது எழுபத்து மூன்று. கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவர் இலங்கையின் தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட துறையில் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக நாடகக்காரயோ என்ற பிரபல தொலைக்காட்சி தொடரில் லொக்கு ஹமுதுருவோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
இவர் இலங்கையின் மூத்த நடிகையும், நகைச்சுவை நடிகையுமான சுசிலா கொட்டகேயின் கணவர் ஆவார். இவரது மறைவு இலங்கை கலை உலகிற்கு பெரிய இழப்பு என்று கருதப்படுகிறது.