Feed Item
·
Added article

குஷ்பூ உச்ச நடிகர்களுக்கு இணையா மார்கெட்ல இருக்கும் போதே அறிமுகமானவங்க சிம்ரன்.

குஷ்பூக்கு பின்னால மீனா, ரம்பா, ரோஜா போல நிறைய பேர் இன்டஸ்ட்ரி உள்ள பிரபலமா இருந்தாலும். அந்த பீக் டச் பண்ணது சிம்ரன்தான். அதுக்கு ரொம்ப முக்கிய காரணமே புதியதலைமுறை நடிகர்கள் படங்கள் பிரபலமாகும் சமயம் இவங்க தமிழ் சினிமால அறிமுகம் ஆகறாங்க.

சீனியர் ஹீரோசோடு நடித்த நடிகைகள் இந்த தலைமுறை நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பில்லாமல் போனது. சிம்ரன் படங்களை பார்த்தாலே அதை சொல்லிட முடியும். அறிமுகமான வருடம் நேருக்கு நேர், ஒன்ஸ்மோர், விஐபி, பூச்சூடவானு க்ளாமரஸ் ரோல்.

அடுத்த வருடமே அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள்னு குடும்ப படங்களாவும். அதில் அவங்க ரோல் முக்கியமானதா பார்த்து பண்ணாங்க. அடுத்த வருடமே துள்ளாத மனமும் துள்ளும், வாலி இரு முக்கிய நடிகர்களோட படங்கள்லயும் ஹை பர்ஃபாமன்ஸ் ரோல்ல கலக்குனாங்க.

சிம்ரன் அவங்க கேரியர்ல அறிமுகமான இரண்டு வருடங்கள்ல அவங்க பீக் டச் பண்ண வாலி மூலமா தான் ஜோதிகா கெஸ்ட் ரோல்ல அறிமுகம் ஆகறாங்க. யார்டா இதுனு ஆடியன்ஸ் யாரையும் ஜோ பக்கம் திரும்பி பார்க்க விடாம சிம்ரன் அட்டகாசம் பண்ணிருந்தாங்க.

அதை விட ஆச்சர்யம் அந்த டைம்ல எதிரும் புதிரும், அந்தப்புறம் ரெண்டு படங்கள்லயும் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போனாங்க. இப்படி சிம்ஸ் உச்சத்தில் இருக்கும் இதே காலத்தில் ஜோதிகா அந்த இடத்திற்க்கு வருவாங்கனு வாலி சமயம் யாரும் கற்பனை கூட பண்ணிருக்க மாட்டாங்க.

மாயாவி படத்தில் சத்யன் சொல்லுவாரே நாங்க சிம்ரன் போஸ்டரே மூனு மணி நேரம் பார்ப்போம். நீயெல்லாம் ஓவர் ஆக்டிங்னு. கிட்டதட்ட அதே பெரும்பாலான ஆடியன்ஸ் மனநிலையாவும் இருந்தது. ஆனாலும் அவங்க தேர்ந்தெடுத்த படங்கள்ல ஒரு மேஜிக் இருந்தது. அதை ஜோ சரியா பயன்படுத்தினாங்க.

வாலி வந்த சமயமே பூவெல்லாம் கேட்டு பார் சூர்யாவோடு பண்ணாங்க. அடுத்த வருசமே முகவரி, குஷி, ரிதம், தெனாலி, சிநேகிதியேனு எல்லாமே முக்கியமான படங்கள். நல்ல ரோலும் கிடைச்சது. அதை மிக அழகா பண்ணிருந்தாங்க. ஆனாலும் அந்த ஓவர் ஆக்டிங்கற விசயம் நினைவில் இருந்து கொண்டேதான் இருந்தது.

ஆனா அடுத்த வருடத்தில் வந்த டும் டும் டும், பூவெல்லாம் உன் வாசம், 12பி படங்கள் அவங்க தனித்துவத்தை அடையாளம் காட்டியது. சந்திரமுகிக்கு பின்னால அவங்க பண்ண மொழி, வேட்டையாடு விளையாடு எல்லாமே முக்கியமான படங்கள் தான்.

நம்ம காலத்தில் குஷ்புக்கு பின்னால பீக் வந்தவங்க ரெண்டே பேர்தான். ஜோ & சிம்ஸ். அதுவும் ஒரே காலகட்டம் அதுதான் தனிச்சிறப்பு.

  • 342