என்னது உன்னை கல்யாணம் பண்ணிக்க உங்க வீட்டுலே,கண்டிஷன்ஒண்ணு போட்டாங்களா…..?
ஆமாங்க….. சின்ன கண்டிஷன்தான்…. வீட்டோட மாப்பிள்ளையா…நீங்க இருக்கணும்….
அது முடியாது… …..
ஏன் முடியாது…..
நான் காலையிலேயே தண்ணி அடிப்பேன்…..
சே……ரொம்ப கெட்ட பழக்கம்….. வேற ஏதாவது.. …..?
பல நேரங்களில் சூதாடுவேன் … …….
அய்யய்யோ…. இது வேறயா…. அப்ப இன்னொன்னு, சொல்லுவாங்களே .அது…….
பொம்பளங்க விஷயமா…. ?என் கம்பெனியிலே… அது தானே எனக்கு வேலையே….
போச்சு…. போ…. நான் போறேன் வழி விடு…
கொஞ்சம் நில்லு…. உங்க வீட்டிலே இந்த கண்டிஷனை வாபஸ் வாங்கினா…..இதுக்குஅர்த்தம்சொல்றேன்..
சொல்லேன் பார்ப்போம்……
முதலில் தண்ணி பம்பில் தண்ணியை ரெண்டு பக்கெட்டில் நானே அடிச்சிகாலையில் குளிப்பேன்,. .. எக்ஸசைஸ்மாதிரியும்ஆச்சி…..
சூதாட்டம்என்னவாம்….
ஷேர் மார்க்கெட்டில் பணம் போடுவது சூதாட்டம்னு பொதுவாஎல்லோரும் தான் சொல்றாங்க….. பத்து கோடி ரூபாய் அதில் என் பணம் புரளுகிறது……இன்னைக்குஎன் கணக்கில் டிரான்ஸ்பர்பண்ணா கூட நான் கோட்டீஸ்வரன்… ……
இப்ப மாட்டுனே பாரு……. அந்த பொம்பளைங்க விஷயம்……
அதுவா ஒரு லிப்ஸ்டிக் கம்பெனியிலே நான் தான் சேல்ஸ் மானேஜர்….. அது பொம்பளைங்க சமாச்சாரம் தானே…. அதுலே எனக்கு ஒரு லட்சம் சம்பளம்….
அதென்னெமோநீ மாத்தி மாத்தி பேசறே….. உன்னை நம்ப முடியாது…. என் மாமா பையன் வீட்டோடமாப்பிளையா வர ரெடியா இருக்கிறான்….. அவனையே கட்டிக்கிறேன்…. குட் பை….
போய் தொலை……. வீட்டோட மாப்பிளையாமே…. அவனை எங்கேயாவது ரோட்டோரமாபோய் தேடு…. …….