Feed Item
·
Added a post

மேஷம்: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்துக் காட்டுவீர். எதிர்பாராத பணம் வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும்.

ரிஷபம்: அடிப்படை வசதி பெருகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். ஊர் விசேஷங்களில் மரியாதை கிடைக்கும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

மிதுனம்: சவாலான விஷயங்களை சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். செல்வம், செல்வாக்கு கூடும். போட்டிகள், விவாதங்களில் வெற்றி கிட்டும். முக்கிய பிரமுகர்களால் பயனடைவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கடகம்: மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று தொடர்ச்சியாக அலைச்சல் இருக்கும். சகோதரர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

சிம்மம்: விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். எதிரிகள் பணிந்து போவர். வியாபாரரீதியான பயணம் திருப்தி தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

கன்னி: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வாகனப்பழுதை சீர் செய்வீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்ப்பீர்.

துலாம்: பழைய நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். புதிய சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

விருச்சிகம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை உணர்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

தனுசு: பழைய சொத்துப் பிரச்சினைகளை இப்போது கையிலெடுக்காதீர். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிலும் கவனமாக இருப்பது நல்லது. நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள். வியாபாரம் முன்னேற்றம் காண்பீர்.

மகரம்: நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். தாயாருடன் விவாதம் வந்துப் போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர். மனக் குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் யாருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிட்டும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான புது திட்டங்களை தீட்டுவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்புயரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும்.

மீனம்: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் விலகும்.

  • 38