Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

ரிஷபம்

வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். விவேகமான செயல்படுதல் நன்மதிப்பை உருவாக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தன வரவுகள் தாராளமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

மிதுனம்

இணையம் சார்ந்த துறையில் புதுமையான சூழல் ஏற்படும். வருங்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்கள் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கலை துறையில் தனிப்பட்ட ஈர்ப்புகள் ஏற்படும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கடகம்

காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் அமையும். தான தர்ம செயல்களில் ஈடுபாடுகள் உண்டாகும். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும். ஆடம்பரமான பொருள்கள் மீது ஈர்ப்புகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

சிம்மம்

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். சிக்கலான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். புதிய முதலீடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடன் பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை        

 

கன்னி

செயல்பாடுகளில் ஒரு விதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். நெருக்கமானவர்கள் இடத்தில் அதிக உரிமை கொள்வதை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில வரவுகள் தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். உத்தியோகத்திலும் மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். தடங்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

துலாம்

பொதுக் காரியங்களில் ஈடுபாடுகள் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். பெற்றோரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனை குறையும். வீடு வாகனங்களை சரி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு புதிய முடிவுகளை எடுப்பீர்கள். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

விருச்சிகம்

வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். மற்றவர்களின் பேச்சுகளுக்கு செவி சாய்க்காமல் செயல்படவும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வேலையாட்கள் இடத்தில் பொறுமையை கையாள்வது நல்லது. அலுவலகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீடு மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

மகரம்

தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

 

கும்பம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உயர் கல்வியில் இருந்த குழப்பங்கள் மறையும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மாற்றத்தை உருவாக்கும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

மீனம்

தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். மூத்த உடன் பிறப்புகள் அனுகூலமான செயல்படுவார்கள். பணி நிமித்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனை சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிலும் ஆய்வு இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

  • 129