Feed Item
·
Added article

முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தின் வியாபாரம் என்பது குறுகிய வட்டத்தில்தான் இருந்தது. அதாவது தமிழ் படங்கள் தமிழ்நாட்டிலும், தெலுங்கு படங்கள் ஆந்திராவிலும், கன்னட திரைப்படங்கள் கர்நாடகாவிலும், ஹிந்தி படங்கள் வட இந்தியாவில் மட்டுமே வசூலை பெற்றுவந்தது. ஒரு கட்டத்தில் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட படங்கள் மற்றும் அளவில் டப் செய்யப்பட்டு வெளியாவது அதிகரித்துக் கொண்டே வந்தது.

தற்போது ஒரு மொழியில் உருவாகி மற்ற மொழிகளிலும் வெளியாகும் படங்களை ஏர் இந்தியா படங்கள் என்ன சொல்கிறார்கள் ஒவ்வொரு மொழியிலும் உள்ள அதிக சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் அதில் ஹீரோவாக நடிக்கிறார்கள் அதிகபட்சத்தில் உருவாக்கும் அந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகி வருகிறது. அதை பேன் இண்டியா திரைப்படம் என சொல்கிறார்கள்.

அதுவும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் பேன் இண்டியா படமாக வெளியாகி வசூலை அள்ளியது. அதன்பின் KGF, KGF2 , காந்தாரா, காந்தாரா 2, புஷ்பா, புஷ்பா 2 போன்ற பல திரைப்படங்கள் பேன் இண்டியா படங்களாக வெளிவந்து வசூலை அள்ளியது.

முதலிடத்தில் அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படம் இருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் 2070 கோடி வசூல் செய்தது. அடுத்து வரிசையாக பாகுபலி 2 - 1810 கோடியும், புஷ்பா 2 - 1742 கோடியும், துரந்தர் 1354 கோடியும், RRR 1230 கோடியும், துரந்தர் 2 - 1226 கோடியும் (ஒரு வாரத்தில்), KGF 2- 1215 கோடியும், ஜவான் 1160 கோடியும், பதான் 1055 கோடியும், கல்கி 2898 கிபி 1042 கோடியும் வசூல் செய்திருக்கிறது.

  • 51