Feed Item
·
Added article

கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் நடிப்பில் இந்த ஆண்டும் அரை டஜன் படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒரு படம் தான் டி55. இப்படத்தை அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். அமரனை போல் இதுவும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

டி 55 திரைப்படத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனம்தான் தயாரிக்கிறது. அப்படம் குறித்த அறிவிப்புகள் கடந்த சில தினங்களாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி டி 55 திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக முதலில் அறிவித்திருந்தனர். அதன் பின்னர் நடிகை ஸ்ரீலிலா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

டி 55 திரைப்படத்தில் நடிக்க உள்ள மற்றொரு நாயகி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை சாய் பல்லவியும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அமரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் சாய் பல்லவி. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

அதேபோல் தனுஷ் உடன் சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் கூட்டணி அமைக்க இருக்கிறார் சாய் பல்லவி. இவர்கள் இருவரும் கடைசியாக மாரி 2 திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்படத்தில் தனுஷும் சாய் பல்லவியும் போட்டி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல் இன்றளவும் யூடியூபில் அதிக வியூஸ் அள்ளிய தமிழ் பாடல் என்கிற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • 49