உலக அழகி பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இன்று கர்வா சௌத் பண்டிகையை அமெரிக்காவில் கொண்டாடினார். தன் கையில் தானே மெகந்தி வரைந்து அதில் கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் மகள் மால்தி மேரி பெயரின் முதல் எழுத்துக்களை பதித்துள்ளார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் வசித்தாலும் ஒவ்வொரு இந்திய பண்டிகையையும் பிரியங்கா தவறாமல் கொண்டாடுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனது பாரம்பரிய ஹேக் மூலம் மெகந்தி வடிவமைத்ததாக அவர் கூறியுள்ளார். பியா கே நாம் கி என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் இன்று கர்வா சௌத் கொண்டாடப்படும் நிலையில், அமெரிக்காவில் நேற்றே அவர் விரதம் இருந்துள்ளார். ரசிகர்கள் அவரது மெகந்தி டிசைனை கவர்ச்சியானது மற்றும் அழகானது என பாராட்டி வருகின்றனர்.