ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த சமீபத்திய புகைப்படங்களில், ரம்யா பாண்டியன் கிளாசிக் மாடர்ன் கெட்டப்பில் அட்டகாசமான போஸ்களை கொடுத்துள்ளார். ஃபேன்சி டிசைனர் பேக்ரவுண்டில், ஸ்லீவ்லெஸ் வைட் டாப்ஸ் மற்றும் கருப்பு உடையில் அவர் கொடுத்திருக்கும் கில்லர் லுக் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மொட்டை மாடி சேலை லுக்காக இருந்தாலும் சரி, இந்த மாதிரி மார்டன் லுக்காக இருந்தாலும் சரி... ரம்யா பாண்டியன் எப்போதும் கெத்துதான் என நெட்டிசன்கள் கமெண்ட் பாக்ஸில் லைக்ஸ்களையும் ஹார்ட்டின்களையும் குவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதனைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் சமுத்திரகனியுடன் ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் தனது இயல்பான மற்றும் நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இருப்பினும், அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையையும் அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது அந்த புகழ்பெற்ற மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட் தான். அதன் பிறகு டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற பல ஹிட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேலும் பிரபலமானார். சினிமா, சின்னத்திரை, போட்டோஷூட் என பல களங்களில் தொடர்ந்து கலக்கி வரும் ரம்யா பாண்டியனின் இந்த புதிய மார்டன் லுக் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது.
