இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயம் பணிகளில் மேன்மை உண்டாகும். திட்டமிட்ட செயல்களில் சாதகமான சூழல் அமையும். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகளும் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிதுனம்
மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். வெளியூர் பணிகளில் இருந்து வந்த தடைகள் குறையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களிடம் கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். பணி புரியும் இடத்தில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படவும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
சிம்மம்
திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கன்னி
கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் முதலீடுகளில் கவனம் வேண்டும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் அமையும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
தாய் வழி உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கிய சிந்தனைகள் மேம்படும். பங்குதாரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
விருச்சிகம்
உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
எதிர்காலம் தொடர்பான நிலையான சிந்தனைகள் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். பணிகளில் இருந்து வந்த சாதகமற்ற சூழல்கள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகரம்
குண நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தோற்றப்பொழிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும். பயம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கும்பம்
உலக நிகழ்வுகள் மூலம் மாற்றம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உறவினர்களுடன் சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். தவறிப் போன சில பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். மனதளவில் பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மீனம்
மனதளவில் புதிய தேடல்கள் பிறக்கும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். அரசு பணியில் இருந்த இழுபறிகள் விலகும். சக ஊழியர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை