அனா டி ஆர்மஸ் தனது காதலரான இசைக்கலைஞர் பெட்டோ மாண்டினெக்ரோவுடன் முதல் முறையாகப் பொது நிகழ்வில் கலந்து கொண்டார். நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற இலத்தீன் இசை அகாடமியின் ஆண்டு விழாவில் இருவரும் கைகோர்த்து வந்தனர். அந்த நிகழ்வில் அனா இடையை இறுக்கும் வகையிலான கவர்ச்சியான உடையில் தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அனாவின் அண்மைய படமான பலேரினா கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் உடற்பயிற்சி ஆசிரியராக நடிக்கும் ஸ்வெட் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நவம்பர் மாத இதழான ஹார்பர்ஸ் பசார் எசுப்பானியாவின் இரண்டு அட்டைப் படங்களில் அவர் தோன்றியுள்ளார். அடுத்து டாம் குரூஸுடன் இணைந்து டீப்பர் படத்திலும் நடிக்கவுள்ளார்.