Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: தவிர்க்க முடியாத செலவுகள் வரும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு. பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

ரிஷபம்: கைமாற்றாக வாங்கிய பணத்தை தந்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை தீரும். பெற்றோர் உடல்நலம் சீராகும். வியாபாரத்தை விரிவுபடுத்த பண உதவி கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.

மிதுனம்: நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். விஐபிக்களிடம் பாராட்டு பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. எதிலும் பொறுமை தேவை.

கடகம்: குடும்பத்தில் நிலவிய காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரி நேசக்கரம் நீட்டுவார். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

சிம்மம்: வெகு நாட்களாக மனதை வாட்டிய பிரச்சினைக்கு முடிவுகட்டுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் அவசியம்.

கன்னி: அலைந்து திரிந்து சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள்.

துலாம்: மனைவி வழி உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். அலுவலகப் பணியாளர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தந்தை வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.

தனுசு: உங்கள் பேச்சாற்றல், ஆளுமைத் திறனால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக சிலரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

மகரம்: குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். உங்களது எதார்த்தமான பேச்சால், தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

கும்பம்: பழைய நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மனைவி வழியில் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். கடனாகக் கொடுத்த பணத்தை போராடி வசூலிப்பீர்கள். பல வகையிலும் பொருட்கள் சேரும்.

மீனம்: சொந்த பந்தங்கள் இடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்தை வழி சொத்துகள் கைக்கு வரும். மூத்த சகோதர, சகோதரிகள் தக்க சமயத்தில் பண உதவி செய்வார்கள். வாகனப் பழுது நீங்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு.

  • 35