ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘அயலான்’ ஆகிய படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருந்தது. இது தகவலாக இருந்தாலும், யார் தயாரிப்பாளர், எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட எதுவுமே முடிவாகாமல் இருந்தது. தற்போது சூரி – ரவிக்குமார் இணையும் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
‘டியூட்’ படத்துக்குப் பின், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் இதுவாகும். இதனை பெரும் பொருட்செலவில் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக அறிவிக்கப்பட்ட போஸ்டரின் மூலம், 2015-ம் ஆண்டு வெள்ளம் வந்த சமயத்தில் நடைபெறும் கதையாக இதனை ரவிக்குமார் வடிவமைத்திருப்பது உறுதியாகிறது.
தற்போது ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூரி. அதனை முடித்துவிட்டு ரவிக்குமார் படத்தினை தொடங்க முடிவு செய்திருக்கிறார். இதில் சூரியுடன் நடிக்க இருப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது.