சுனிதா கோகோய் முதலில் ஜூனியர் சுபாயா நடன ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர். அதைத் தொடர்ந்து 'த்ரீ' திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் பள்ளித் தோழியாக நடித்திருந்தார். அதன் பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கினார். அதன் பின், பிக் பாஸ் தமிழ் சீசனில் பங்கேற்று இன்னும் பரவலாக பேசப்பட்டார். அவரது இயல்பான பேச்சு, உற்சாகமான நடத்தை, டான்ஸ் திறன் ஆகியவற்றின் மூலம் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி சுனிதா, வெப் சீரிஸ்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில், ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும், சுனிதா தனது ஃபிட்னஸ் ஜர்னி, நடன ரீல்ஸ், பயண புகைப்படங்கள், ஃபேஷன் ஷூட்ஸ் போன்றவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார். அவரது ஒவ்வொரு பதிவும் ஆயிரக்கணக்கான லைக்குகளையும், நூற்றுக்கணக்கான கருத்துக்களையும் பெற்று வைரலாகிறது. அந்த வகையில் தற்போது இவர், நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதுநாள் வரை இதுபோன்ற கவர்ச்சியை காட்டாத சுனிதா திடீரென கவர்ச்சியில் எல்லை மீறியுள்ளது அவரது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் சுனிதாவை திட்டி வருகின்றனர்.