Feed Item
·
Added a news

பிரித்தானிய நாட்டவர்கள் இனி 30 நாட்கள் வரையிலான குறுகிய காலச் சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்களுக்கு சீனா செல்லும்போது அவற்றுக்கு விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட அதே சலுகையை இப்போது பிரித்தானியாவும் பெற்றுள்ளது.

இதற்கிடையில் பிரித்தானியாவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி மருந்து நிறுவனமான எஸ்ட்ராசெனொகா சீனாவில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

  • 54