இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்களால் உற்சாகம் ஏற்படும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பேச்சு சாதுரியம் மூலம் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
ரிஷபம்
துணைவர்வழி உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும். சமூக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். கூட்டு வியாபாரம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மறதியால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
மிதுனம்
வெளியிடங்களில் கோபத்தை விட விவேகத்தை கையாளவும். வியாபாரம் நிமித்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பயனற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. புது விதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மூத்த உடன் பிறந்தவர்கள் வழியில் சுப காரியங்கள் கைக்கூடும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
அரசு காரியங்களில் இருந்த தாமதம் மறையும். சமூக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கன்னி
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார செயல்களில் கவனம் வேண்டும். வேலையாட்கள் மாற்றம் குறித்த சிந்தனைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் கூடும். திட்டமிட்ட சில பணிகள் பலிதமாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் தாமதம் உண்டாகும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். மாணவர்களுக்கு ஞாபக மறதி அவ்வப்போது தோன்றி மறையும். எதிர்பாராத சில செய்திகள் மூலம் விரயம் உண்டாகும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : கத்தரிபூ
விருச்சிகம்
செயல்பாடுகளில் சுதந்திர தன்மை வெளிப்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு
எதிராக இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிந்தனைகளின் தெளிவு உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கலை சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்த தடுமாற்றம் குறையும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
மகரம்
குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய பொருள்கள் வாங்கும் பொழுது கவனம் வேண்டும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த மந்தத்தன்மை விலகும். வியாபார ரீதியான பயணங்கள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சனைகள் விலகும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைக்கூடும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபார கூட்டாளிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். பரிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
மீனம்
பொதுவாழ்வில் செல்வாக்கு மேம்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் வழியில் சில நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். உபரி வருமானத்தில் முயற்சிக்கு ஏற்ப பலன்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்து வந்த அலைச்சல்கள் குறையும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
