Feed Item
·
Added article

சென்னையில் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய செய்தி நடிகர் தனுஷ் பற்றியது தான். தனது ரசிகர் மன்றத்தை ' தனுஷ் நற்பணி இயக்கம்' என நல இயக்கமாக மாற்றிய பிறகு, இன்று அதன் மகளிர் அணியைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார்.

தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ள பெண்களுடன் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இது வெறும் ரசிகர் சந்திப்பு அல்ல, தனது இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கை என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கு பிறகு தனுஷும் அரசியலில் நுழைய தயாராகி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரசிகர் மன்றத்தை இயக்கமாக மாற்றியது, பெண்களை அதிகம் உள்ளடக்குவது போன்றவை சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்ற மற்ற நட்சத்திரங்களின் பாணியை நினைவூட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

  • 158