நடிகர் சந்திர பாபு அவர்களை அனைவரும் அறிவோம்.
திரு.சந்திர பாபு அவர்கள் ஒரு தயாரிப்பாளராக, ஒரு நடன கலைஞராக, ஒரு நடிகராக வலம் வந்தவர்.
தட்டுங்கள் திறக்கபடும் என்ற திரைப்படத்தை தயாரித்து தோல்வி கண்டவர்.
தாம் தயாரித்த திரைப்படத்தினால் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக சந்திர பாபு அவர்கள் மதுவிற்கு அடிமையாகி கடைசி காலங்களில் ஒரு வேளை சோத்துக்கே அவதி பட்டார்கள்.
தனது கஷ்டங்களையும் ,துக்கங்களையும் நடிகர் திலகம் அவர்களிடம் சென்று முறை இட்டார்கள்.
அண்ணே, சாப்பாட்டிற்கே கஷ்டமா இருக்குண்ணே. ஏதாவது செய்யுங்கண்ணே என்று களைப்புடன் சந்திர பாபு கூறுகின்றார்.
சந்திர பாபு அவர்களுக்கு உணவும், செலவிற்கு பணமும் கொடுத்து உதவி செய்கின்றார்கள் நடிகர் திலகம் அவர்கள்.
நடிகர் திலகம் மேலும் 3 சினிமாவில் சந்திரபாபு நடிப்பதற்கு சிபாரிசு செய்தார்கள். நீதி, ராஜா மேலும் ஒரு படம் நினைவில் இல்லை.
வருமானம் கிடைத்ததும் மீண்டும் சந்திரபாபு அவர்கள் மதுவிற்கு அடிமையாகின்றார்கள். திரைப்படத்தில் நடிப்பதற்கே முடியாத நிலைக்கு சந்திர பாபு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.
சந்திர பாபு அவர்கள் மீண்டும் நடிகர் திலகம் அவர்களிடம் உதவி கேட்டு வருகின்றார்கள்.
நடிகர் திலகம் அவர்கள் சந்திரபாபு அவர்களிடம் நீ எங்கும் செல்ல வேண்டாம் என்னுடனே இருந்து கொள் என்று கூறி சந்திர பாபு அவர்களை தனது சகோதரனை போல் நடிகர் திலகம் அவர்கள் பார்த்து கொண்டார்கள்.
சில நாட்களில் சந்திர பாபு அவர்கள் நடிகர் சிவாஜியிடம்,அண்ணே வேலை இன்றி சாப்பிட மனம் ஏனோ ஏற்கவில்லை. ஏதாவது வேலை கொடுங்கண்ணே என்று சந்திரபாபு அவர்கள் கேட்கின்றார்கள்.
தள்ளாடும் உடல் நிலையில் நீ என்ன வேலை செய்வாய்? சரி நீதான் நமது பேரன், பேத்திகளை கார் ஓட்டுநருடன் சென்று பள்ளிக்கூடங்களுக்கு சென்று அழைத்து வா என்றார்கள்.
நாட்கள் நகர்ந்தது.வாரங்களும் கடந்தது. மாதங்களும் உருண்டது.
ஒரு நாள் படப்பிடிப்பிலிருந்த நடிகர் திலகம் அவர்களுக்கு ஒரு.செய்தி செல்கின்றது. ஆம் அது ஒரு இடி போன்ற செய்தியாகும்.
தங்களின் அரவணைப்பில் இருக்கும் தம்பி சந்திரபாபு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற இடியான செய்தி தான் அது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வீட்டிற்கு விரைகின்றார்கள்.
அனைவரையும் சிரிக்க செய்து, தள்ளாடி முடிவில் அல்லாடிய உடல் மூச்சின்று சடலமாக கிடந்தது. உடலை பார்த்த நடிகர் திலகம் அவர்கள் மிகுந்த வேதனை அடைந்தார்கள்.
நடிகர் திலகம் அவர்கள் இறுதியாக சந்திரபாபு அவர்களின் இறுதி சடங்கை கிறிஸ்தவ முறைப்படி சந்திச பாபுவின் உடலை தேவாலயத்திற்கு கொண்டு சென்று ஒரு கிறிஸ்தவராகவே நடத்தி நிறைவு பெற செய்தார்கள்.
நடிகர் சந்திர பாபு அவர்களின் தம்பி அவர்களே ஒரு நேர்காணலில் இதை பெருமையுடன் கூறி இருந்தார்கள்.
இனம் அறியா மனம் படைத்தவர் எங்கள் நடிகர் திலகம்.
உதவியே தனது பதவியாக அலங்கரித்தவர் எங்கள் நடிகர் சிவாஜி கணேசன்.
