இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமின்றி நடக்கும். எதிர்பார்ப்புகள் சில நிறைவேறும். தான தர்மங்களில் மனம் ஈடுபடும். பிரமுகர்களின் சந்திப்புகளால் ஆதாயம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். ஊக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் கைகூடும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வருமானம் தேவைக்கு இருக்கும். வாகன பராமரிப்பில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திடம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புதுமையான செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கடகம்
தாய் வழி உறவுகளிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். புதிய வேலைகள் சாதகமாக அமையும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். பயணங்களால் அனுபவம் மேம்படும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
சிம்மம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் உருவாகும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். பணிகளில் மந்தமான போக்கு காணப்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவவேறும். திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்தை தரும். தியானம் மேற்கொள்வது மன பதட்டத்தை குறைக்கும். துணையுடன் அனுசரித்து செல்லவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
துலாம்
மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். குடும்ப பொருளாதாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். நிதானமான செயல்கள் நன்மையை தரும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். வியாபாரத்தில் உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
கடன் சார்ந்த செயல்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணத்தால் உடலில் சோர்வு உண்டாகும். செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மன அமைதியை தரும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
தனுசு
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தேடி வந்தவர்களுக்கு நன்மைகளை செய்வீர்கள். பழைய பிரச்சனை முடிவுக்கு வரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உழைப்புக்கான மதிப்புகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். சிந்தனை திறனில் சில மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் சில நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கும்பம்
பண வரவு தாமதமாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். பழைய சிக்கல்கள் சில குறையும். கணவன், மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் உண்டாகும். சினம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிறு சிறு விமர்சன பேச்சுக்கள் வரக்கூடும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் பலமுறை யோசித்து ஈடுபடவும். சிந்தனைகளில் சில தடுமாற்றம் உண்டாகும். அரசு செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை