Feed Item
·
Added article

சோசியல் மீடியாவின் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளது. இதற்கு முன்னாடி பேஸ்புக் மட்டுமே கோலோச்சிய நிலையில், இப்போ இன்ஸ்டாகிராம், எக்ஸ் என பல சமூக வலைதளங்கள் படையெடுத்து வந்துவிட்டன. இவற்றின் மூலம் விதவிதமான ரீல்ஸ்கள், கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு சிலர் பயன் அடைந்து, ஓவர் நைட்டில் பெரிய விஐபியாகவே பிரபலமாகி வருகிறார்கள்.

அந்த வகையில், இப்போது நடிகைகளுக்கெல்லாம் மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக அமைந்திருப்பதுதான் இந்த இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரைப். இந்த சப்ஸ்கிரைப் மூலம் மாதம் ரூ. 199 முதல் ரூ. 16,000 வரை சந்தாவை செலுத்தி, தங்களுக்கு பிடித்தமான நடிகைகளின் பிரத்தியேகமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் முறை, இது இணையத்தில் ஒரு செம மாஸ் புது பிசினஸாகவே பார்க்கப்பட்டு வருகிறது,

சினிமாவில் வாய்ப்பிழந்த ஒருசில நடிகைகள், இந்த சப்ஸ்கிரைப் ஆப்ஷன் மூலமாகவே மாதா மாதம் லட்சக்கணக்கில் பணத்தைச சம்பாதித்து வருகின்றனர். அந்த வரிசையில், ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, அப்புறம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாச்சலம், இப்போ இந்த சப்ஸ்கிரைப் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருகிறார்.

  • 35