இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். கடுமையான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான அவப்பெயர்கள் குறையும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
ரிஷபம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார விருத்திக்கான சூழல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம்
சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரப் பணிகளில் விவேகம் வேண்டும். உடன் இருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். செலவுகளால் கையிருப்புகள் குறையும். எண்ணிய பணிகளில் சில மாற்றம் ஏற்படும். மறைமுகமான விமர்சனம் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கடகம்
குழந்தைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
சிம்மம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்களும் நட்புகளும் கிடைக்கும். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கன்னி
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளை சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். விவசாய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
துலாம்
வியாபார ரீதியான பயணங்கள் ஏற்படும். ஆசியர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தன வரவுகளில் திருப்தி உண்டாகும். அரசால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
பிரிந்த உறவினர்கள் மீண்டும் வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புது விதமான உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கலகலப்பான பேச்சுகள் மூலம் நட்பு வட்டம் மேம்படும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகரம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நிறைவேறும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் சோர்வும் மந்தம் உண்டாகும். மனதளவில் இருந்த சிறு குழப்பம் விலகும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். பணிகளில் இருந்த நெருக்கடிகள் விலகும். செலவுகளின் தன்மையறிந்து செயல்படவும். வியாபாரப் பணிகளில் இருந்து வந்த போட்டிகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
உறவினர்கள் வழியில் சுகமான செய்திகள் கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வியாபாரம் நிமித்தமாக சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உருவாகும். புதுவிதமான ஆசைகளும் இலக்குகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை