இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்
மேஷம்
மனதளவில் உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். வெளிவட்டத்தில் மதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும். தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட தூர ஒரு பயண வாய்ப்புகள் கைகூடும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
ரிஷபம்
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உருவாகும். வரவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பணி சார்ந்த அவசர முடிவுகளை தவிர்க்கவும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
குழந்தைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் வழியில் இருந்த வேறுபாடுகள் விலகும். பயணங்கள் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கடகம்
குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோகத்தில் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
சிம்மம்
முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். புதுவிதமான கனவுகள் உருவாகும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கன்னி
உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கால்நடை விஷயங்களில் மேன்மை ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
பிள்ளைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் கருத்துக்கான மதிப்புகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். சூழ்நிலை அறிந்து திறமைகளை வெளிப்படுத்தவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
எதிர்காலம் சார்ந்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மருத்துவ செலவுகள் சிலருக்கு ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். பணி சார்ந்த அலைச்சல்கள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். சொத்து சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மீனம்
சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். அரசு விஷயங்களில் புரிதல்கள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
