பாலிவுட் கதாநாயகி தீபிகா படுகோன் அக்டோபர் 26 முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். ஷாருக்கான் நடிக்கும் 'கிங்' படத்திற்காக அவர் திரும்புகிறார் என Deccan Herald தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
ஷாருக்கான் - தீபிகா ஜோடி ஏற்கனவே ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், பதான் போன்ற படங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த புதிய படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குவதாக கூறப்படுகிறது. தீபிகாவின் கதாபாத்திரம் மிகவும் கவர்ச்சியாகவும், அதிரடியாகவும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தீபிகா சமீபத்தில் கர்பத்திற்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்திருந்தார். தற்போது மீண்டும் பிசியாக மாறியுள்ள அவர், கிங் படத்திற்காக ஸ்டைலான தோற்றத்தில் தயாராகி வருகிறார்.