இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: சவாலான காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் மத்தியில் இருந்த பகைநீங்கி ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல் படுவர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
மிதுனம்: பழைய மகிழ்ச்சிகரமான சம்பவங்களை நினைவு கூர்வீர். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தைவழியில் உதவி கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல் விலகும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும்.
சிம்மம்: பணிகளை முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குழப்பம் தீர்ந்து குடும்பத்தில் அமைதி நிலவும். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஆதரவு தருவர்.
கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். மாணவர்கள் உற்சாகமாக காணப் படுவர். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரித்து மதிப்பு உயரும்.
துலாம்: தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள்கிடைக்கும். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கணவன் -மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.
தனுசு: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர். பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மகரம்: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர். பெற்றோரின் ஒத்துழைப்பு கிட்டும். வெளியூரி லிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
கும்பம்: மனக்குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். வாகனத்தால் வீண் செலவு இருக்காது. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். தலைமையிடத்தின் நன்மதிப்பை பெற்று சாதிப்பீர்.
மீனம்: குடும்ப உறுப்பினர்களால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் இறங்குவீர்.