Feed Item
·
Added a post

கடைக்கு போய் அரை கிலோ சிக்கனும்…….. பாசுமதி அரிசி அரை கிலோவும் வாங்கிட்டு வாங்க….இன்னிக்கி உங்களுக்கு லீவாச்சே….. பிரியாணி செய்யறேன்…..

மளிகை கடைகாரனுக்கு இந்த மாச கடன்ஓவரா போயிடிச்சி……மாச கடைசி, கையிலேகாசு வேற இல்லடி…. பிரியாணி வேண்டாம்…,

என்னை லவ் பண்ணி…. எங்க வீட்டுலே சண்டை போட்டு,கல்யாணம் செஞ்சி இங்கேஅழைச்சிட்டுவந்தீங்க ….வாழ வந்த ஒரு மாசத்திலேயே இந்த கதியா…..

இன்னும் ரெண்டு நாளிலே சம்பளம் வந்துடும் ரேகா.. உன் கையில் சொளையா கொடுக்கிறேன்….. நீயே குடும்பத்தை பார்த்துக்க…..

எல்லாம் கணக்கு போட்டு பாத்துட்டேன்….. நீங்க கொடுக்க போற இருபதாயிரம் ரூபாயிலே மளிகை பத்தாயிரம்…… காய்கறிக்குமாசம் முழுதும் அஞ்சாயிரம்….. கேஸ்…பால் அது இதுன்னு ஒரு ரெண்டாயிரம்…..இன்னும் வாஷிங் மிஷின் வாங்கணும்….. பிரிட்ஜ் வாங்கணும்……கிரைண்டர்…மிக்ஸி வாங்கணும்….. அப்பாலே….

நிறுத்து ரேகா….. என்னை குழப்பாதே…

இதுல என்ன குழப்பங்க…. எனக்கு நாப்பதாயிரம் சம்பளமுன்னுபீத்திக்கி னீங்க… அதை நம்பி நானும் மோசம் போயிட்டேன்…. இப்ப என்னடான்னா இருபதாயிரம்கையிலே கொடுக்கிறேன்னுசொல்றீங்க…., மீதி பணம் எங்கு போச்சி……

அய்யோ……வாங்கின லோனுக்கு பிடித்தம் செய்யறாங்க ரேகா….. அது முடிய ரெண்டு மாசம் இருக்குது…..பொறுமையா..இரு….

இப்படி தான்….அவசர பட்டு காதலிச்சிடறாங்க… எப்படி இந்த சிட்டியிலே குறைஞ்ச வருமானத்திலே வாழ முடியுமான்னு யாரும் யோசிக்கறதே இல்லை…?

அப்ப…. காசுக்குதான் என்னை காதலிச்சியா…. உனக்காக எத்தனை குடும்ப சண்டை….. சச்சரவு ஏற்பட்டு போச்சு…. கடைசியிலே இப்படி சொல்லிட்டியே ரேகா….

அடஆமாங்க….. எனக்கு நல்லா புரிஞ்சி போச்சி……வாழ்க்கைக்குமுதலில் தேவை பணம்…அது இருந்தா தான் காதல்…. ஓடி போய் கல்யாணம்எல்லாமே ….. இதெல்லாம் பின்னாடி தான்….. பணம் இல்லைன்னா…வசதி இல்லைன்னா எந்த காதலும் வாழாது….. தோல்வி தான் சேகர்….

அப்படியா….. சரி இவ்வளவு பேசறியே…இந்த பெரிய வீட்டுக்கு வாடகை இருபதாயிரம் ரூபாயை யாரு…கொடுப்பாங்க?……. உங்க அப்பனா வந்து கொடுப்பான்….

அட ராமா. அதை நான் கணக்கிலேயே சேர்க்கைலையே… போச்சி…. போச்சி.. எல்லாம் போச்சி.. தலையிலே துண்டு போட்டுகினு நானும் வேலைக்கு போக வேண்டியது தான்….

பயப்படாதே ரேகா….. இது என் சொந்த வீடு… மேல் போர்சன் ரெண்டும் வாடகைக்குவிடு…. முப்பதாயிரம்வருமானம் வரும்…. இப்ப உன் பிரச்சனை தீர்ந்ததா… ?

அன்பே !இதைஎதுக்குங்க … எங்கப்பா கிட்டே மொதலிலேயே சொல்லலை…. சிட்டியிலே இவ்வளவுபெரியசொந்த வீடான்னு வாயை பொளந்திருப்பாரு……எந்த சண்டைசச்சரவு இல்லாமே ஜாலியா. …நான் இங்கே வாழ வந்திருப்பேன் இல்லை…

ரேகா எந்த விஷயத்திலும்தனியே போராடி தான் ஜெயிக்கணும்….. அப்பதான் வாழ்க்கை சுவைக்கும்…சரி கடைக்குபோய்நீசொன்னதைவாங்கிட்டு வரேன்….

  • 22