Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதளவில் இருந்த கவலைகள் குறையும். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

ரிஷபம்

புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் அமையும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். அறப்பணி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மிதுனம்

நண்பர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். தன வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். உயர் பொறுப்புக்கள் மூலம் மதிப்புகள் உயரும். சில அனுபவங்கள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். நம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

கடகம்

நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையும். உடன் இருப்பவர்கள் இடத்தில் அளவுடன் இருக்கவும். எதிலும் பெறுமையுடன் செயல்படுவது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களை தவிர்க்கவும். கால்நடை பணிகளில் விவேகம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

சிம்மம்

பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். சுப காரியங்கள் கைகூடும். உயர் அதிகாரிகள் இடத்தில் நன்மதிப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் வரவுகள் உயரும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

கன்னி

எதையும் சமாளிக்கும் பக்குவம் உருவாகும். வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்புகள் உயரும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். உத்தியோகப் பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். மனதளவில் இருந்த சோர்வுகள் விலகும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

துலாம்

புதிய முயற்சிகளில் எண்ணியவை ஈடேறும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேலையாட்கள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் அமைதி வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். கல்வியில் இருந்த மந்த நிலை விலகும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

நினைத்த காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் உயரும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி

 

தனுசு

சில பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு வழியில் ஆதரவுகள் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்க திட்டமிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்விப் பணிகளில் இருந்த மந்தத்தன்மை குறையும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

மகரம்

குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் விலகும். சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுகளுக்கு மதிப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

கும்பம்

எதிலும் படபடப்பு இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சக ஊழியர்கள் இடத்தில் பொறுமையை கையாளவும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். வழக்கு விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். வாகன பயணங்களில் மிதவேகம் நன்று. மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். விவேகமான செயல்பாடுகள் நல்ல மாற்றத்தை உருவாக்கும். முயற்சி ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

  • 42