Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். பழைய நினைவுகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். நீண்ட நாட்கள் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். இழுபறியாக இருந்த பணிகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். தற்பெருமை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

ரிஷபம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய முயல்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். ஏற்ற இறக்கமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மிதுனம்

பயணங்களின் முக்கியத்துவத்தை அறிந்து மேற்கொள்வது நன்மையை ஏற்படுத்தும். பொறுமையுடன் செயல்பட்டு எண்ணிய காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மனதளவில் இருந்த குழப்பம் விலகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். மனதில் உத்வேகமான தன்னம்பிக்கையும் தைரியமும் உருவாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

கடகம்

பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செயல்படவும். மனதில் இருக்கும் எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கவின் கலைகள் மீதான ஆர்வம் உண்டாகும். சாதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

சிம்மம்

உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப தனது கருத்துக்களை முன் வைப்பீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சமூக பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். சினம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கன்னி

உடன் பிறந்தவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்புகள் கிடைக்கும். கமிஷன் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் பயணம் சாதகமாக அமையும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன் இருப்பவர்கள் ஆதரவுகள் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

துலாம்

தனவரவுகளில் இருந்து வந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். சமூக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தோற்ற பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதில் தெளிவும் புத்துணர்ச்சியும் உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

நண்பர்களின் ஆலோசனை புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். வியாபார தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை தவிர்க்கவும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் மேம்படும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

தனுசு

இனம் புரியாத சிந்தனைகள் மற்றும் செயல்களில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழல்கள் அமையும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமாக பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தடங்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மகரம்

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான தருணம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தெளிவான சிந்தனைகள் மூலம் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

கும்பம்

தொழில் மற்றும் கல்வி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கூட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். புதிய நபர்களால் மாற்றங்கள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளால் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். தந்தையின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்

மீனம்

வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வழக்கு பணிகளில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். திருப்பணி விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. இசை துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழல் அமையும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

  • 24