கனடா பிரதமர் மார்க் கார்னி மணிலாவில் பிலிப்பைன்ஸ் அதிபருடன் பேச்சு நடத்தி வர்த்தக ஒப்பந்த பேச்சை முடித்துள்ளார். இந்த ஒப்பந்தம் 2027-ம் ஆண்டு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எழுபது கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொண்ட சந்தை கனடா வணிகங்களுக்கு திறக்கப்படும்.
அதே நேரத்தில் ஆசியான் - கனடா வர்த்தக ஒப்பந்த பேச்சும் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவை மட்டும் நம்பி இருப்பதை குறைக்க கனடா ஆசிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது. இது கனடாவின் இந்தோ - பசிபிக் திட்டத்தில் முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.